பாரீஸ், 12 ஏப்ரல் 2018
ஹெபடைட்டிஸ் சி குறித்த பொது சுகாதார அணுகுமுறைக்கு ஆதரவாக முடிவுகள் இருக்கின்றன
ராவிடாஸ்விர் உள்ளிட்ட புதிய மருந்துகளின் மூலம் ஹெபடைட்டிஸ் சி கலவை சிகிச்சையை மலிவு விலையில், பாதுகாப்பாகவும், பயனுள்ள வகையிலும் அளிக்க முடியும் என்றும், குறிப்பாக சிகிச்சையளிப்பதே கடினம் என கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட, இந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியதற்கான மிக அதிக விகிதங்கள் இருப்பதாகவும், பாரீசில் நடைபெற்ற சர்வதேச கல்லீரல் மாநாட்டில், லாப நோக்கமற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான டிரக்ஸ் ஃபார் நெக்லட்டட் டிசீஸ் இனிசியேட்டிவ் (டிஎன்டிஐ), பேஸ் 2/3 ஸ்டார்ம் –சி-1 பரிசோதனை சிகிச்சையின் இடைக்கால முடிவுகளைச் சமர்ப்பித்திருக்கிறது.
“தற்போது இருக்கும் ஹெபடைட்டிஸ் சி சிகிச்சைகளை ஒப்பிடும் போது, சோஃபோஸ்புவிர் / ராவிடாஸ்விர் கலவை மருந்துகள் தான் மிகச் சிறப்பானதாக இருக்கும் என முடிவுகள் காட்டுகின்றன. அதேவேளையில், அதன் விலையும் மலிவானதாகவும், மருந்து நிறுவன அணுகல் திட்டங்களில் இருந்து விலகியிருக்கும் நாடுகளுக்கு ஒரு மாற்று வழியை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கும்” என டிஎன்டிஐ, நிர்வாக இயக்குநர் பெர்னாட் பீகால் கூறியிருக்கிறார்.
இந்தப் பரிசோதனை மருந்துகளை, டிஎன்டிஐ வழிகாட்டலோடு, எகிப்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான பார்கோ பார்மாசியுடிகல்ஸ் தயாரிக்கிறது. மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 10 இடங்களில், இம்மருந்து தயாரிப்பிற்கு மலேசிய சுகாதார அமைச்சு இணை ஆதரவாளராக இருக்கின்றது. 12 வார சிகிச்சைக்கு 300 அமெரிக்க டாலர் என்ற இலக்கின் அடிப்படையில், மலேசியாவில் பரிசோதனை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கான ஒப்பந்தம் கடந்த 2016 மற்றும் 2017-ல் கையெழுத்திடப்பட்டது. மலேசியாவில் தற்போது இந்த சிகிச்சைக்கு ஆகும் விலையை விட இது கிட்டத்தட்ட 100 % குறைவாகும்.
“மலேசியாவில் ஹெபடைட்டிஸ் சி என்பது பொது சுகாதாரத்தில் மிகப் பெரிய கவலையளிக்கும் விசமாக மாறியிருக்கிறது. நாட்டின் நன்மைக்காக இந்த சிகிச்சைக்கான அணுகலை அதிகரிக்க வேண்டியது அவசியம்” என மலேசிய சுகாதார அமைச்சைச் சேர்ந்த பொது சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறியிருக்கிறார். கடந்த 2017 செப்டம்பர் மாதம், சோஃபோஸ்புவிர் காப்புரிமையில், “அரசாங்கப் பயன்பாட்டு” உரிமை வழங்கிய மலேசிய அரசாங்கம், மலேசியாவில் ஹெபடைட்டிஸ் சி உடன் வாழ்ந்து வரும் 400,000 நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் பொது ஜெனரிக் எச்சிவி பரிசோதனை செய்து கொள்ள வழி வகை செய்தது.
சோஃபோஸ்புவிருடன் இணைந்த ராவிடாஸ்விர் கூட்டு மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, சகிப்புத்தன்மை மற்றும் மருந்தியல் தன்மைகளைக் கண்டறியும் ஸ்ட்ராம் -1 ஓபன் லேபல் பரிசோனையை டிஎன்டிஐ நடத்தியது. இந்த ஆய்வில் நாள்பட்ட நோய்தொற்றுடன் வாழும் 301 வயதுவந்தவர்களுக்கு ராவிடாஸ்விர்/சோஃபோஸ்புவிர் கலவை மருந்துகள், கல்லீரல் நோய் அல்லாதவர்களுக்கு 12 வாரங்களுக்கும், கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு 24 வாரங்களுக்கும் கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எச்சிவி சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தக்கூடிய சர்வதேச தரநிலைக்கு ஏற்ப, 12 வாரங்கள் சிகிச்சை நிறைவு பெற்ற பிறகு, அவர்களில் 97% பேர் குணமாகியிருந்தனர் (95% CI: 94.4-98.6). சிகிச்சையளிப்பதே கடினமாக இருக்கும் நோயாளிகள் மத்தியில் கூட குணமானதற்கான விகிதம் அதிகளவு காணப்பட்டது: கல்லீரல் நோய் உள்ள நோயாளிகள் ( 96% குணமாக்கப்பட்டது), எச்ஐவியுடன் வாழும் நோயாளிகள் அவர்களின் வழக்கமான சிகிச்சைகளோடு (97%), கல்லீரல் நோய் உள்ள நோயாளிகள்(96%) உட்பட ஜினோடைப் 3 தொற்று கொண்ட நோயாளிகள் (97%) இதற்கு முன்பு எச்சிவி சிகிச்சைகளை மேற்கொண்ட நோயாளிகள் (96%). முக்கியமாக, நிறைய ஆபத்தான பிரச்சினைகளுடன் கூடிய நோயாளிகள் கூட குணப்படுத்தப்பட்டனர். மேலும், இதில் எந்த ஒரு எதிர்பாராத பாதுகாப்பு சமிக்ஞையும் காணப்படவில்லை.

“சிகிச்சையளிப்பவர்களின் பார்வையில், இது மிகவும் அற்புதமானது, ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் போல், சிகிச்சைப்பலன்கள் மிகக் குறைவாகப் பெற்று வருபவர்கள் உட்பட அனைத்துவிதமான நோயாளிகள் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், ஒரு எளிதான, மலிவான, ரோபஸ் சிகிச்சைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என சான்ஸ் பிராண்டியரெஸ் / எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) ஆகியவற்றின் துணை செயல் இயக்குநர் பியர் மெண்டிஹாராட் கூறியிருக்கிறார். “வளரும் நாடுகளில் உள்ள மிகவும் பாதிப்படையும் வகைகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு, இந்தச் சிகிச்சையை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.”எம்எஸ்எஃப் மற்றும் டிஎன்டிஐ ஆகிய இரண்டும் இணைந்து, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள, எச்சிவி நோயாளிகளுக்கு, எம்எஸ்எப்பின் உருமாற்ற முதலீட்டுத் திறன் திட்டமுயற்சியின் (டிஐசி) நிதியுதவியில், ஸ்ட்ராம்-சிதிட்டத்தின் மூலம் சிகிச்சையையும், கவனிப்பையும் அதிகரிப்பதற்காகப் பணியாற்றி வருகின்றன.
உலகெங்கிலும் 71 மில்லியன் மக்கள் ஹெபடைட்டிஸ் சி உடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நோயினால் ஆண்டுக்கு 400,000 பேர் இறக்கின்றனர். சில ஆண்டுகளாக மிகச் சிறந்த சிகிச்சைகள் இருந்தும் கூட, ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருபவர்களில், 3 மில்லியனுக்கும் குறைவானவர்கள் தான் சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர். வரும் 2030-ம் ஆண்டிற்குள், எச்சிவி பாதிப்புக் கண்டறியப்பட்டவர்களில், 80% நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு கொண்டிருக்கிறது.
ராவிடாஸ்விர் என்ற வாய்வழி உட்கொள்ளும் என்எஸ்5ஏ மட்டுப்படுத்திக்கு பிரசிடியோ பார்மாசியுடிகல்ஸ் நிறுவனம் டிஎன்டிஐக்கு உரிமம் வழங்கியிருக்கிறது. மலேசியா மற்றும் தாய்லாந்தில் டிஎன்டிஐ நடத்திய பரிசோதனையில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஜினோடைப் 1 (42% பங்கேற்பாளர்கள்) அல்லது ஜினோடைப் 3 (52%) கொண்டவர்களாக இருந்தனர். எனவே இந்தக் கலவை மருந்தின் செயல்திறன், இரண்டு கூடுதல் ஜினோடைப்களுக்கானது என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. எச்சிவி ஜினோடைப்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மத்தியில் கலவையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பினை ஆவணப்படுத்தும் மேல் பரிசோதனைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகள் மத்தியில், பொது சுகாதார அணுகுமுறையை ஏற்படுத்தி, ஹெபடைட்டிஸ் சி-க்கு சிகிச்சைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படவிருக்கிறது.
“பொது சுகாதார அணுகுமுறையைத் தூண்டி, ஹெபடைட்டிஸ் சி சிகிச்சையை மலிவு விலையில் வழங்குவதில் பார்கோ பெருமையடைகின்றது. ராவிதாஸ்விரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த, கூடுதல் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும் எதிர்கால கூட்டுமுயற்சிகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்“ என பார்கோவின் தலைமைச் செயலதிகாரி டாக்டர் ஷெரின் ஹெல்மி கூறியிருக்கிறார்.
ஊடகத் தொடர்புகளுக்கு
- DNDi: Ilan Moss, +1 646 266 5216, imoss@dndi.org / media@dndi.org
பதாகை குறிப்பு
I. Andrieux-Meyer, S.S.Tan, N. Salvadori, F. Simon, T.R. Cressey, MS Rosaida, Abu Hassan MR, H. Omar, H. P. Tee, W.K. Chan, Suresh K., S. Thongsawat, K. Thetket, A. Avihingsanon, S. Khemnark, S. Thanprasertsuk, J-M. Piedagnel, Sasikala S., Nur Asimah Z.A, N. Da Silva, J. Brenner, B. Pécoul, M. Lallemant and Shahnaz M. Safety and efficacy of ravidasvir plus sofosbuvir 12 weeks in non-cirrhotic and 24 weeks in cirrhotic patients with hepatitis C virus genotypes 1, 2, 3 and 6: the STORM-C-1 phase II/III trial. International Liver Congress, Paris, April 11-15 2018, France. Poster LBP-032.
டிஎன்டிஐ பற்றி
டிரக்ஸ் ஃபார் நெக்லட்டட் டிசீஸ் இனிசியேட்டிவ் (டிஎன்டிஐ) அதாவது, புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான மருந்துகள் கண்டறியும் அமைப்பான (டிஎன்டிஐ) என்பது லாப நோக்கமற்று இயங்கி வரும் ஆர் & டி நிறுவனம் ஆகும். இது கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு புதிய சிகிச்சைகளை வழங்குவதற்காகச் செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக தூக்கப் பிரச்சினை, சாகாஸ் நோய், லெயிஷ்மானியாசிஸ், பிலாரியா, குழந்தைகளின் எச்ஐவி/எயிட்ஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி. www.dndi.org
Photo credit: Suriyan Tanasri-DNDi